Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

உருவாகிறதா தளபதி 2?

thalapathy2  news

மணிரத்னம் – ரஜினிகாந்த் – மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆழமான பதிப்பாக இன்று வரை இருந்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உள்ளே இருந்த கலைஞனை அழகாக வெளிக்காட்டிய படம் தளபதி என்றால் மிகையல்ல.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் இயக்க முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் காற்று வெளியிடை படத்திற்கு இந்த படத்தை எடுக்க மணிரத்னம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான கதை விவாதமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, மணிரத்னம் இயக்கும் தளபதி-2வில் நாயகனாக ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். மம்மூட்டி நடித்த வேடத்தில் விக்ரம் நடிக்கிறாராம். இவர்கள் இருவரிடமும் சமீபத்தில் கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் மணிரத்னம்.

விஜய், விக்ரம் இருவருமே நண்பர்கள் என்பதால் அவர்களை இணைப்பது எளிதாகி விட்டதாம். மேலும், அட்லி இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், மணிரத்னம் படத்தை முடித்த பிறகுதான் முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளில் வெளியிடப்பட உள்ளதாம்.

Check Also

vikram gautham menon

உறுதியாகும் விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணி !

இப்ப வர போகுது , அப்ப வர போகுது என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்த விக்ரம் – கெளதம் ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE