Warning: session_start(): open(/tmp/sess_6ecbf7dac71b91b9484fe55954e8fb04, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Vanamagan Movie review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Vanamagan Movie review

vanamagan reviewVanamagan Movie review

தழும்பும் வசதியில் உணர்வுகளை தொலைத்த ஒருத்தியின் வாழ்க்கையில் வரும் ஒரு காட்டுவாசி என்னென்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறான் , அவனுடைய பின்புலம் , அவன் சார்ந்த மக்களின்   துயரத்தை பேசும் படம் வனமகன்.

ஜெயம் ரவி படத்தில் பேசவில்லை , ஆனால் தனது நேர்த்தியான நடிப்பால் அவரை பற்றி பேச வைத்திருக்கிறார்.ஒரு காட்டுவாசியின் பார்வை , புரியாத மொழியை கேட்கையில் அவனுடைய ரியாக்சன் என நிறைய இடங்களில் கச்சிதம்.  ஜெயம் ரவியின் உழைப்பு பெரிது என்றாலும் , கதாப்பாத்திரத்தின் ஆழக்குறைவால் ஏதோ மிஸ் ஆகிற உணர்வு பெரும்பான்மையாய் எழுகிறது. இது போன்ற கதையில் நடிக்க துணிந்ததற்காகவே பாராட்டுகள் ரவி.

படம் முழுவதும் சாயிஷா தான். சாயிஷா இல்லாத ஒரே சீன் , ஜெயம் ரவி பற்றிய பிளாஷ்பக் மட்டும் தான். முதல் படத்திலேயே இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அரிதிலும் அரிது. அதை திருப்திபடுத்தும் வகையில் பயன்படுத்தி இருக்கிறார். ஸ்ரேயா , தமன்னா வரிசையில் தமிழ்சினிமாவிற்கு கிடைத்திருக்கும்  மிக சிறப்பாக நடனம் ஆடும் கதாநாயகி .

வழக்கமான ஓவர் நடிப்பை இதிலும் செய்து இருக்கிறார் தம்பி ராமையா. ‘பச்சை உடுத்திய காடு’ பாடலில் திருவின் ஒளிப்பதிவு அசத்தல். புதிய ஐந்நூறு ருபாய் நூட்டு , புலி கிராபிக்ஸ் இயல்பு.

திரைக்கதையை வேகமாக நகர்த்துவதற்கான சாத்தியகூறுகள் இருந்தும் , நான் மெதுவாக தான் போவேன் என்று அடம்பிடித்து நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விஜய். காட்டுவாசி மக்களின் வாழ்கை முறை , ரவி – சாயிஷாவின் காதல் , சாயிஷா பற்றிய பின்புலம் என்றும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தொட்டு கமர்ஷியல் கேம் விளையாட முயற்சித்து இருக்கிறார் விஜய். முயற்சி தான்.

இறுதிகாட்சியில் துப்பாக்கி குண்டை நெஞ்சில் வாங்கி கொண்டு , ஜெயம் ரவி எதிரிகளை துவம்சம் பண்றது , அதோடு நில்லாமல் சாயிஷா உலக உபதேசங்களை எந்த சலனமும் இல்லாமல் இயல்பாய் கேட்பது என்பதெல்லாம் ரசிகர்களுக்கு விபூதி அடிக்குற மொமன்ட். என்ன தான் கமெர்ஷியல் படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா விஜய் சார்?

ஒரு குழந்தையை காப்பற்றி வளர்க்கும் காட்சியின் மூலம் காட்டுவாசிகள் என்றாலே மனிதனை சமைத்து தின்பார்கள் என்று இருக்கும் கமர்ஷியல் கருத்தை உடைத்திருக்கிறார் விஜய்.அவர்களும் நம்மை போல இந்த மண்ணின் மக்கள் என்ற பாசிடிவ் புரிதலை விதைத்தது சிறப்பு.  சாயிஷா தன் சித்தப்பாவை பார்க்க போவது , அங்கே நடக்கும் உரையாடல், ஜெயம் ரவி மற்றும் அவரது அப்பாவிற்குமான சொல்லாத  பிணைப்பு என இயக்குனர் விஜயின் முத்திரை ஏராளம்.

வஞ்சகம் , பேராசையோடு வாழும் இந்நாட்டுவாசிகளை விட  காட்டுவாசிகள் நல்லவர்கள்  தான் என்பதை கமர்ஷியல் கஷ்டத்தோடு சொல்லி இருக்கிறது வனமகன்!

Reviewer : Sathyan KM

 

Check Also

sagi

Sangili Bungili Kadhava Thorae review

Sangili Bungili Kadhava Thorae review ஹிட் தரமாட்டேன் என்று நீண்ட நாட்களாக தவமிருந்த ஜீவா தனது தவத்தை கலைத்திருக்கும் ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE