Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Saravanan Irukka Bayamaen Review

sib reviewSaravanan Irukka Bayamaen Review

சூரி , ரவி மரியா , இன்னொரு டிரண்டிங் காமெடியன் அப்புறம்  ஏதோ ஒரு ஹீரோ , புது ஹீரோயின் இருந்தா போதும்  எழில் படம் ரெடிங்கற உலக பார்முலா தமிழ்சினிமாவை பாக்குற சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அதே பார்முலாவுல வந்து இருக்குற இன்னொரு படம் தான் சரவணன் இருக்க பயமேன். 

ஹீரோ சரவணன் தேன்மொழியை காதலிக்கிறார். ஆனா தேன்மொழி சரவணன் மேல ஒரு வெறுப்போடயே இருக்காங்க. தேன்மொழியை சரவணனோட சேர்த்து வைக்க ஒரு காலத்துல சரவணன காதலிச்சு அதை சொல்லாமலே இறந்து போன பாத்திமாங்கற ஆவி உதவி பண்ணுது. அப்புறம் நடக்குற கலாட்டாக்கள் , சரவணன் தேன்மொழி சேர்ந்தாங்களா?ங்கறது தான் மீதி படம். கண்டிப்பா சேர்ந்து தான் இருப்பாங்கனு நீங்க நினைக்கிறது புரியுது. இப்படி தான் எல்லா சீனுமே நாமலே சொல்லிடலாம். அந்த அளவுக்கு எளிமையாக படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

உதயநிதி பெரிய மெனக்கெடல் இல்லாம தனக்கு எது வருமோ அதை சரியா பண்ணி இருக்கார். ரெஜினா ஒரு ரெண்டு பாட்டுக்கு அப்புறம் கொஞ்சம் கிளாமர் இதை தவிர வேற எதுவும் இல்லை . சூரியோட காமெடி கொஞ்சம்  கொஞ்சமா காலாவதி ஆகுதா , இல்ல பொன்ராமோட பண்றப்ப தான் நல்ல பண்ணுவேன்னு சத்தியம் பண்ணி இருக்காரானு தெரில.

வெளியே வரும்போது எல்லாரும் சிரிச்சிகிட்டே வரணும்னு எடுத்த படம் , உள்ளே வரும்போது சிரிச்சிகிட்டே வந்தவன கூட பொம்மையா உட்கார வைச்சது. அங்கே இங்கேன்னு நல்ல காமெடில அபப்டின்னு  நாமலா நினைச்சி சிரிச்சா தான் உண்டு.

ஒரு கட்டத்துல நல்ல பில்டப்போட என்ட்ரி தர ரவி மரியா , ரோபோ ஷங்கர் கண்டிப்பா நம்மள செமையா சிரிக்க வைக்க போறாங்கனு நினைச்சா , அங்கே தான் முழு மொக்கையும் காத்துகிட்டு இருக்கு. அதுவும் ஒரே சீன் தான். ஸ்ருஷ்டி பேய்னு சொல்லி கண்ணை நீலமா காண்பிக்கும் போது கொஞ்சம் காமெடியா இருக்கிறது  உண்மைதான் !

துள்ளாத மனமும் துள்ளும் , பூவெல்லாம் உன் வாசம்னு கிளாசிக் ஹிட்ஸ் கொடுத்த எழில் காமெடி படம் எடுக்கறேன் , அதான் டிரண்டிங்னு களம் இறங்கி இப்படி ஒரு வெறுமையான படத்தை தந்து இருப்பது  பெரும் துயரம்.

பொழுதுபோக்கு படம்னு உள்ள வந்து அதுல ஒரு பாதியையாவது எதிர்ப்பார்ப்பது ரசிகனின்குறைந்தபட்ச உரிமை தானே ?

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE