Warning: session_start(): open(/tmp/sess_8283fb5c91edfdf0d4a3ee5ac4117f37, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Sangili Bungili Kadhava Thorae review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Sangili Bungili Kadhava Thorae review

sagiSangili Bungili Kadhava Thorae review

ஹிட் தரமாட்டேன் என்று நீண்ட நாட்களாக தவமிருந்த ஜீவா தனது தவத்தை கலைத்திருக்கும் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற.

ஜீவா கஷ்டப்பட்டு வாங்கும் வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேயோட கதை என்ன ? பேய் அந்த வீட்டை விட்டு போனதா இல்லையா?-ங்கறது தான் படத்தோட கரு.

தமிழ்சினிமாவுல ஏற்கனவே அரைச்சி அரைச்சி கல் தேஞ்சி போன பேய் கதைனாலும் , கொஞ்சம் ப்ரெஷாக தந்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் ஐகி. வாடகை வீட்டில் உள்ளவர்களின் இன்னல்களையும்  , கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும் கிடைத்த இடத்தில  அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர்.

வெகு நாட்களுக்கு பின் தனது இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பால் வசீகரிக்கிறார் ஜீவா. தோல்வியால் துவண்டிருந்த ஜீவாவுக்கு ஒரு பாதுக்காப்பான ஹிட்  படமாக இது இருக்கும். பெரும்பான்மையான பந்துகளை சிரிப்பு சிக்சராக மாற்றியிருக்கிறார் சூரி.சூரியுடன் ஜீவாவின் கூட்டணிக்கு சூப்பர் லைக்ஸ். ஸ்ரீதிவ்யா  அழகான அடக்கமான நடிப்பால் ஈர்க்கிறார்.

அனுபவமுள்ள ராதாரவியின் நடிப்பாற்றலை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஐகி. ‘பெரியப்பா நீ செத்துடுவில’னு கேட்டதுக்கு அப்புறம் மரணமடைஞ்சு தனது சவத்தை கொலை செய்றத பார்த்து ராதாரவி பேசுறதெல்லாம் கொஞ்சம் டச்சிங். ராதிகா , தம்பி ராமையா, தேவதர்ஷினி , இளவரசு என ஒரு நட்சத்திர பட்டாளமே தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். பேய் படம்னாலே ஒரு கோவை சரளா பார்சல் போல.

விஷால் சந்திரசேகரின் பாடல்கள் ஒட்டவில்லை , ஆனால் பின்னணியில் மிரட்டியிருக்கிறார்.

உறுத்தலான வாஷிங் மிஷின் காமெடியை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். சூரியை முக்கால்வாசி நிர்வாணத்தோட காமெடிங்கற பேர்ல ஓட வைக்குறது எல்லாம் தேவை இல்லாத ஆணி. இவ்வளவு இறங்கி வந்து காமெடி பண்ணி தான் சிரிக்க வைக்கணுமா டைரக்டர் சார்? அங்கே இங்கேன்னு நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று கடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது .

சங்கிலி புங்கிலி கதவ தொற – ஜீவாவின் சிறப்பான செகண்ட் இன்னிங்க்ஸ் ✌️

Reviewer : Sathyan KM

Check Also

CnzhW1kVYAIs1DL

Thirunaal confirmed on 5th August

Actor Jiiva and actress Nayanthara starrer “Thirunaal” which was lying in the cans for a ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE