Warning: session_start(): open(/tmp/sess_dd73e3f2d1b8fbddf0969b2a693d0ca5, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Oru Kidayin Karunai Manu review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Oru Kidayin Karunai Manu review

okkmrevOru Kidayin Karunai Manu review

ஒரு கிடாயின் கருணை மனு – படத்தின் பெயரை கேட்டவுடன் ஆடு கோழிலாம் வெட்டகூடாதுன்னு படத்துல ஒரே மெசேஜா, அறுவையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அமர்ந்தவர்களை சிரிக்கவும் , கடைசியில் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்து தமிழ்சினிமாவில் தனது ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி இருக்கிறார் சுரேஷ் சங்கையா.

குலசாமி கோவிலில் ஆடுவெட்ட கும்பலாக கிளம்பும் ஒரு கிராம மக்கள் நடுவில் ஒரு சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து விடுபட அவர்கள் செய்யும் காரியங்களை  மண் மனம் மாறாமல் நகைச்சுவை விருந்தாக படைத்தது இருக்கிறார் இயக்குனர்.

புதுமண தம்பதிகளாக விதார்த் – ரவீனா கச்சிதம். இருவருக்கும் பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும்  தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். முக்கியமாக, ரவீனா தன் கணவருக்கு என்ன ஆகுமோ என்று கண்களில் காட்டும் பரிதவிப்பு ரொம்ப எதார்த்தம். ஒருவர் இருவர் என்றில்லாமல் , படத்தில் வரும் அத்தனை கதாப்பாதிரங்களுமே ரசனைக்குரியவை.

ரகுராமின் இசை இனிமை. வெகுநாட்களுக்கு பின் அந்த மண் சார்ந்த மக்களின் பேச்சு , சொலவடை , கேலி , கிண்டல் முதலியவற்றை எந்த கலப்படமும் இல்லாமல் காட்சிப்படுத்திய இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கையில் , கிடாய் தந்த கருணை மனுவை ஏற்று முனியாண்டி ஆடிய திருவிளையாடல் தான் அந்த சம்பவமோ  என்ற யூகம் எழுகிறது.

மொத்தத்தில் ஒரு கிடாயின் கருணை மனு – அக்மார்க் கிராமத்து வாசனையுடன் அழகான படம்!

Reviewer : Sathyan KM

Check Also

kidaari review

Kidaari Movie review

Kidaari Movie review Village based story is plethora in kollywood, but any few films attains ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE