Warning: session_start(): open(/tmp/sess_3faba7e001548b685778122ee2e260db, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Maragadha Naanayam Movie review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Maragadha Naanayam Movie review

mnkreMaragadha Naanayam Movie review

ஆதியின் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் வெளி வந்து இருக்கும் தமிழ் படம் மரகத நாணயம்.

பல்லவ மன்னரின் மரகத நாணயத்தை அடைய முயற்சிக்கும் ஆதி & க்ரூப்சின் கதை தான் படம் என்று எளிதாக சொல்ல முடிந்தாலும் உள்ளே எக்கசக்க சுவாரசியங்களை கலந்து இருக்கிறார்  இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன்.

முனிஸ்காந்த் மீண்டு வந்ததில் இருந்து தொடங்கும் ஆச்சரியம் படமெங்கும் பளிச்சிடுகிறது. அதுவும் நிக்கி கல்ராணி ரோலின் புதுமை தமிழ்சினிமாவுக்கு ரொம்ப புதுசு. இது போன்ற ஒரு பாத்திரத்தில் நடிக்கவே ஒரு தைரியம் வேண்டும். வாழ்த்துக்கள் நிக்கி.

கதைக்கு தேவையான அளவான நடிப்பை அழகாக தந்து இருக்கிறார் ஆதி. ரங்கூனுக்கு பின் இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனனாக சிறப்பாக தனது ரோலை செய்து இருக்கிறார் டேனி. பல நாயகர்களின் நண்பனாக ஒரு ரவுண்டு வரப்போவது நிச்சயம்.

முனிஸ்காந்த் காமெடி பட்டாசாய் வெடிக்கிறார். கிட்டதட்ட காமெடி வில்லனாக  அபரிவிதமான அசால்ட் நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஆனந்தராஜ். திணிக்கப்படும் பாடல்கள் இல்லாதது ஆறுதல். பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு இயல்பாக படத்தோடு ஒன்ற வைக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை போல் போகுதே என்று நினைக்கையில் படத்தை டாப் கியரில் தூக்கி சிறந்த பொழுதுபோக்கு படமாக பத்திரமாக தரை இறக்கியுள்ளார் இயக்குனர்.

கண்டிப்பாக இந்த வாரம் நம்பி போகக்கூடிய பொழுதுபோக்கு படமாக  மரகத நாணயம் இருக்கும்.

Reviewer : Sathyan KM

Check Also

sagi

Sangili Bungili Kadhava Thorae review

Sangili Bungili Kadhava Thorae review ஹிட் தரமாட்டேன் என்று நீண்ட நாட்களாக தவமிருந்த ஜீவா தனது தவத்தை கலைத்திருக்கும் ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE