Warning: session_start(): open(/tmp/sess_11a0171ba49c09bb6ec5c54733998656, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
கபாலியும் காழ்ப்புணர்ச்சியும்.. ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

கபாலியும் காழ்ப்புணர்ச்சியும்..

kab123

கபாலி – இந்த படத்தை பார்ப்பது தமிழ் சமூகத்தின்  கடமைகளில் ஒன்றாக மாறியது. இதற்கு காரணம் பிரம்மாண்ட  விளம்பரமா? ரஜினி என்னும் அரை நூற்றாண்டு ஆளுமையின் ஈர்ப்பா ? படத்தின் முதல் போஸ்டர் தொடங்கி முன்னோட்டம் வரை தெரிந்த ‘தரமான படம் ‘ என்ற முத்திரையா ? என்றால் சந்தேகமே இல்லை , மூன்றும் தான். இவற்றில் ஒன்று இல்லாமல் போயிருந்தால் கூட அது கடமையாக மாறி இருக்காது.

பிரம்மாண்ட விளமபரங்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வில்லையா? என்ற கேள்விக்கு பதில் , நீங்கள் வேறு எதை தாணு போன்ற வியாபாரிகளிடம் எதிர்ப்பார்க்க முடியும் ? “தான் ஒரு விளம்பரத்தில் நடித்து அதை நம்பி மக்கள்  வாங்கி, ஒருவனாவது ஏமாற்றம் அடைந்தால் , அது ரஜினி என்னும் நம்பிக்கைக்கு எதிரானது. அதனால் நான் விளம்பரங்களில் நடிக்கவில்லை” என கூறிய ரஜினியேயே , ‘இது சூப்பர்ஸ்டாரோட பைவ்ஸ்டார் ‘  என எல்லா ஊடங்களிலும் வெளிவர செய்த பெருமைக்குரியவர்(?!) அல்லவா தாணு. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்ட தொழிலில் , எதுவும் தப்பில்லை என்ற நிலை மாறி பல வருடங்கள் ஆகிறது. சகிக்கவே பழகியவர்கள் நாம் , இதையும் சகிப்போமாக !

ஆனால் சகிக்க முடியாத சில விஷயங்கள் உண்டு. அது காழ்ப்புணர்ச்சியுடன் வேண்டுமென்றே ஒரு படத்தை தோல்விக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பகிரப்படும் கருத்துகள். கபாலி கண்டதும் அதே தான்.

ஒரு படம் பிடிக்கவில்லையென்றால் , அதை பகிர நேர்மையான பல வழிகள் உண்டு. அப்படி பகிர்பவர்களை யாரும் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் , சாதிய – நடிகர்  காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. அப்படி ஒரு விமர்சனத்தை தான் பிரபல நாளேடு(?! ) தினமணி செய்தது. ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் , தமிழ்சினிமாவின் உச்சபட்ச நடிகரை கொண்டு பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட சமுதாய குரலை சில இடங்களில் பேச வைத்து விட்டானே என்ற அதீத பதட்டமும் , ஆற்ற முடியாத வயித்தெரிச்சலை தவிர அந்த தலையங்கத்தில் வேறு எதுவும் கண்களுக்கு  தெரியவில்லை. அப்படி என்றால் , கபாலியை தலித் படம் என்ற பெட்டிக்குள் அடக்கலாமா? அப்படி சொல்லி விட முடியாது. கதைக்களத்தில் ரஞ்சித் வரம்பு மீறிய வசனங்களை எந்த இடத்திலும் வைக்கவில்லை. அந்த களம் , அந்த சமயம் , வெளிப்படும் கோபங்களே சாட்டையடி வசனமாக மாறி இருக்கின்றன. இதை நீங்கள் ரஞ்சித்தின் ஜாதி என்ன என்று ஆராய்ந்து , இந்த வசனங்களை தொடர்புப்படுத்துவதால் வந்த வினை  ‘தலித் படம் ‘ என்ற முத்திரை. அப்படி என்றால் , முத்தையாவின் எல்லா படங்களையுமே ‘தேவர் படம்’ என்று நீங்கள் ஏன் அடைக்கவில்லை என புரியவில்லை.படங்கள் பொதுவானவை , நம்முடைய பார்வையின் வழியே தான் நாம் அதற்கு முத்திரை குத்துகிறோம். பார்வைகள் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை என்ற நியதி அறிக !

இப்படி இதையெல்லாம் மௌனமாய் ரசித்த ஒருவர் , சில தினங்களுக்கு முன் தன்னையறியாது தன் காழ்ப்பை மேடையில் காட்டிவிட்டார். அதுவும் ‘கபாலி தோல்வி படம்’ என்று சொன்னது பெரிதாய்படவில்லை , ஆனால் அதை சொல்லி விட்டு நமட்டு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள் அங்கே நிற்கிறார் கவிப்பேரரசு . அப்படியென்றால் கபாலியின் எதிர்ப்பார்ப்பும் , அதில் நாம் இல்லையே என்ற தவிப்பும் , படத்தின் வசனங்களில் வெளிப்பட்ட நெருப்பும் அவரை எத்தனை நாள் தூங்காமல் செய்ததோ , யார் அறிவார் :)

இப்படி சாதிய காழ்ப்பு இருக்க , முன்னே கூறியது போல் அது என்ன நடிகர் காழ்ப்பு ? இது ஒன்றும் தமிழ்சினிமாவிற்கு புதியது அல்ல. சில நடிகர்களை  சிலருக்கு சில காரணங்களால் பிடிக்காது. பெரும்பாலும் , தனக்கு பிடித்த நடிகரை விட பெயரும் , புகழும் அதிகமாக வைத்திருக்கிறாரே என்பதாகவும், அடுத்தவர் கருத்துகளை தன் மீது பாய விட்டு அதை தன் கருத்துபோல் பாவிப்பர்களாகவும் இருப்பார்கள். இது சில பெரிய நடிகர்களுக்கு எதிராய் அமைதியாய் இயங்கும் கூட்டம்.அது ரஜினிக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. படத்தை கூட பார்க்காமல் சிலர் செய்த  நெகடிவ் விமர்சனங்களை பரப்பிய கூட்டம் ,இன்னும் ஒரு படி மேலே போய் படத்தின் திருட்டு வீடியோ லிங்கை பகிர்ந்த மலிவான கூட்டம் அது. ரஜினி அமிதாப்பை போல் தன்னுடைய வயதை ஒற்றிய பாத்திரங்களில் நடிக்காமல் , ஏன் இப்படி இளவயது நடிகைகளுடன் டூயட் பாடுகிறார் என புலம்பிய கூட்டம் தான் , இது ரஜினி படமாக இல்லை என்று புதுபுராணம் பாடுகிறது. படத்தை இன்னொருமுறை அமைதியாக பார்த்து விட்டு , நாம் எந்த அளவுக்கு வெறுப்பை உமிழ்ந்திருக்கிறோம் என்று அவர்கள் தன்னை சுயப்பரிசோதனை செய்துகொள்வது நலம்.

தனக்கு ஏன் படம் பிடித்திருக்கிறது ? ஏன் பிடிக்கவில்லை ? என நேர்மையான முறையில் விமர்சனம் செய்பவர்கள் , எந்த காலத்திலும் மதிக்கப்படுவார்கள். ஆனால் இங்கே தாணுவுடன் போட்டிபோட கூடிய வியாபாரம் செய்யும் விமர்சகர்கள் இருப்பது சாபக்கேடு. ” நீ உடைச்சு தான் பேசுற ஆளுனா , நானும் உடைச்சி பேசுறேன்டா வாடா “ என்ற ரீதியில் இதை வைத்து நமது வருவாயை எகிறவைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக விமர்சனம் என்று பல ஆண்டுகளாக வன்மத்தை விதைப்பவர்களை ‘புகழ் பெற்ற விமர்சகர்கள்’ என நாம் எப்படி ஒத்துகொண்டோம் ? அவர்களுடைய கார்பரேட் எண்ணங்களை நாம் என்று உணர போகிறோம் ?

அப்படியென்றால் கபாலியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறிர்களா ? கண்டிப்பாக இல்லை. ரஞ்சித் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சில இடங்களில் சமரசங்களை மேற்கொண்டுள்ளார். படத்தில் இயல்பாக வெளிப்பட வேண்டிய வேகத்தை சில இடங்களில் குறைத்து உள்ளார். திரைக்கதையில் இன்னும் மெனக்கேடு செய்து இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி  , ரஜினி என்னும் அற்புத கலைஞனை அவர் வெளிக்கொண்டு வந்த விதம் அபாரமானது . இவர்கள் காழ்ப்போடு பரப்பும் நெகடிவ்களை விட பாசிடிவ்கள் அதிகம். அதை தன்னுடைய வசதிக்காக தன்னுடைய வசதிக்காக மறைத்தவர்கள் , இதை போல மற்ற படங்களுக்கும் செய்து விட கூடாது என்பதே நம் எண்ணம் .

இன்று கபாலி , முதல் நாள் செய்த நெகடிவ் பரப்புரையை தவிடுபொடியாக்கி , பெரும்பாலான மக்களை அடைந்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் , நெகிழ்ச்சியையும் தந்து இருக்கிறது.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் , ஆதவன் மறைவதில்லை !

பிரியங்களுடன்..
குத்தூசி.

 

Check Also

Cn4ENabUEAAEnCp

Kabali creates history in TN, Kerala and AP on Day 1

Superstar Rajinikanth’s Kabali released yesterday to storm the box office worldwide and thanks to the ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE