Warning: session_start(): open(/tmp/sess_bd158131c1588b996af7afd632ebc175, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Kaatru Veliyidai Movie review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Kaatru Veliyidai Movie review

kv reviewKaatru Veliyidai Movie review

மணிரத்னம் படம் என்றாலே ஒரு புரியாத ஆர்வம் தொற்றிக் கொள்ளும். அதற்கு ரகுமான் இசை இருக்கும், நல்ல காட்சியமைப்பு இருக்கும் என்பது எதார்த்த உண்மை. அப்படி இப்படத்தின் முதல் பார்வை வந்தவுடனே ஒரு ஆர்வம் இருந்தது. பாடல்கள் வெற்றி பெற, இணையத்தில் அதிக விளம்பரங்கள் எதிர்ப்பார்பை வளர்த்தது.

கார்த்தி இளமை ததும்ப நடித்திருக்கிறார். தன்னலம் ஓங்கிய ஒருவனின் இயல்புகளை, எண்ண ஓட்டத்தை, பிரமாதமாக வெளிப்படுத்தி உள்ளார். அதீதி ராவ் அழகாக இருக்கிறார் என்பதை காட்டிலும் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களை தவிர தில்லி கணேஷ், பாலாஜி, ருக்மணி என சிலர் ஆங்காங்கே வந்து செல்கிறார்கள்.
ரவி வர்மணின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் தொட்டு இறுதி வரை இயற்கை அழகை செவ்வனே காட்சிப்படுத்தி உள்ளது. அருமை !! ரகுமானின் பாடல்கள் காட்சியோடு பிணைந்து பயணித்து பார்ப்பவர்களை கதையோடு ஒன்ற வைக்க பெரும்பாடுப்படுகிறது. பிருந்தாவின் நடனம், ஸ்ரீகர் பிசாத்தின் படத்தொகுப்பு என பிற துறைகளின் வேலைப்பாடு மனதில் பதிய மறுக்கிறது

“காதல் பிரிவின் ஏக்கம்” என்பதை பின்புலத்தை மட்டும் மாற்றி மாற்றி எத்தனை படம் தான் எடுப்பார்களோ ? விமானப்படை அதிகாரி, எல்லையில் பணிபுரியும் மருத்துவர் என கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அதில் இருபாலரின் இயல்புகளை வேறுபடுத்தி காட்ட பிரயத்தனப்பட்டு முழுமையான தோல்வியை தழுவி பார்ப்பவர்களை நெளிய வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். புதியதை சொல்கிறேன் என்று திருமணம் முன் கர்ப்பம் என்கிற ஒற்றை சமாச்சாரத்தை பிடித்துக்கொண்டு சுற்றியுள்ளார் இப்படத்தில்.

கடல் வெளிவந்த போது மணிரத்னம் இதை விட மோசமான திரைக்கதையை தந்துவிட முடியாது என்றவர்கள் இப்படத்தை பார்த்து தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள்.
மணிரத்னம் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமான படமிது !!
– Deva Palaniappan for Heytamilcinema.com
Kaatru Veliyidai Movie review மணிரத்னம் படம் என்றாலே ஒரு புரியாத ஆர்வம் தொற்றிக் கொள்ளும். அதற்கு ரகுமான் இசை இருக்கும், நல்ல காட்சியமைப்பு இருக்கும் என்பது எதார்த்த உண்மை. அப்படி இப்படத்தின் முதல் பார்வை வந்தவுடனே ஒரு ஆர்வம் இருந்தது. பாடல்கள் வெற்றி பெற, இணையத்தில் அதிக விளம்பரங்கள் எதிர்ப்பார்பை வளர்த்தது. கார்த்தி இளமை ததும்ப நடித்திருக்கிறார். தன்னலம் ஓங்கிய ஒருவனின் இயல்புகளை, எண்ண ஓட்டத்தை, பிரமாதமாக வெளிப்படுத்தி…

Our Verdict

Our Rating

2.5

மணிரத்னம் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமான படமிது !!

User Rating: 2.6 ( 10 votes)

Check Also

CpUiv34UsAAewOw

Karthi’s new look for ‘Kaatru Veliyidai’

Karthi who is currently busy with the shoot of his new movie Kaatru Veliyidai with ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE