Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

அஞ்சலியை வருத்தப்பட வைத்த காஞ்சனா 2

anjali

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காஞ்சனா அஞ்சலியை வருத்தப்பட வைத்துள்ளது.  படத்தில் நித்யா மேனன் நடித்திருந்த கங்கா கதாப்பாத்திரத்துக்கு முதலில் அஞ்சலியிடம் தான் பேசினார்களாம். ஆனால் , அஞ்சலியோ ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதை காரணம் காட்டி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். படத்தை பார்த்த அஞ்சலி நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து , மிஸ் பண்ணிட்டோமே என ரொம்ப வருத்தப்பட்டாராம்.

Read More »

கார்த்தியின் அப்பாவாக நடிக்கும் விவேக்

karthi vivek

கொம்பன் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தி அடுத்து “இதற்கு தானே ஆசைபட்டாய் ” கோகுல் இயக்கத்தில் “காஷ்மோரா” என்ற படத்தில் நடிக்கிறார். இரட்டை வேடத்தில் கார்த்தி நடிப்பதாக சொல்லப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா  நடிக்கின்றனர். வித்தியாசமான கதை களத்தில் தயராகி வரும் இந்த படத்தில்  கார்த்தியின் அப்பாவாக நகைச்சுவை நடிகர் விவேக் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக் முதல் முறையாக ஹீரோவின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கம்போடியா செல்லும் புலி படக்குழு

puli vijay

சமீபத்தில் ஆந்திர வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்திய  புலி படக்குழுவினர் அடுத்தகட்டமாக கம்போடியாவில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் சம்மந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க செல்கின்றனர். ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு இந்தப் பாடல் காட்கிகள் படமாக்கப்பட உள்ளன. அதே சமயம் சென்னையிலும் பிரம்மாண்ட செட் அமைத்து படப்படிப்பு நடத்தும் எண்ணத்திலும் படக்குழு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

லாரன்சை பாராட்டிய விஜய்

lawrence vijay

கடந்த வாரம் வெளியான காஞ்சனா 2 படம் வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. காஞ்சனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படமும் வெற்றி பெற்றது லாரன்சை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் இளையதளபதி விஜய் லாரன்சை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டியுள்ளார். காஞ்சனா படம் தந்த பிரமிப்பில் இருந்து தான் இன்னும் மீளவில்லை எனவும் லாரன்சிடம் விஜய் தெரிவித்தார். பட வெளியீட்டிற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லாரன்சை அழைத்து பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் ...

Read More »

“சூர்யா , சிவகார்த்திகேயன் செம ஹாட் “- ஸ்ரீபிரியங்கா

priyan

இந்த பெண்ணை எங்கயோ பார்த்து இருக்கிறோமேனு எல்லாரையும் நினைக்க வைக்கிற மாதிரியான எதிர் வீட்டு பெண்ணை போன்ற வசீகரத்துடன் சிரிக்கிறார்  ஸ்ரீபிரியங்கா. பக்கா தமிழ் பொண்ணு. இந்த வாரம் வெளிவர இருக்கும் கங்காரு படத்தின் கதாநாயகி. ஒரு சின்ன இன்டர்வியூ என்று சொன்னவுடன் ஆர்வமாக பேச ஆரம்பிக்கிறார் … நான் பொறியியல் படித்த போதே சினிமா மீதான மோகம் எனக்கு வந்துவிட்டது . மென்பொருள் நிறுவனத்தில் சிறிது காலம் பணி புரிந்தேன். அப்போது திடீரென்று ஒரு சினிமா வாய்ப்பு என்னை தேடி வந்தது . ...

Read More »

தயாரிப்பாளர்கள் செத்து பிழைக்கிறார்கள்

suresh kamatchi

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார்  பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  ‘சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 24ல் 150 திரையரங்குகளில் வெளியாகிறது . அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம் என்று கேட்டவுடன் மனிதர் குமுறிக் கொட்டித்தீர்த்து  விட்டார். ”சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்களுக்கே    சம்பளம் கொடுப்பது ...

Read More »

வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன்

unnamed (10)

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான “பேட் பாய்ஸ்” பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். அதனை தொடர்ந்து SS தமன் இசையில் டமால் டுமில் படத்தில் உஷா உத்துப் பாடிய டமால் டுமில் பாடல் மூலமாக ஜொலித்தார். அருள்நிதி நடித்து வெளிவந்த தகராறு, கடவுள் ...

Read More »

ஒகே கண்மணி முன்னோட்டம்

ok12

தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளிவருகிறது ஒகே கண்மணி . மணிரத்னத்தின் கடைசி படமான கடல் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு , மணிரத்னம் தன்னுடைய வலுவான  முழு காதல் களத்தில்  உருவாக்கியிருக்கும் படம் தான் “ஒகே கண்மணி “. படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன. அதிலும் மணிரத்னம் ரஹ்மானுக்கு எவ்ளோ ஸ்பெஷல் என்பதை ரஹ்மானின் கடைசி சில ஆல்பங்களை கேட்டு ...

Read More »

அஜித் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மி மேனன்

ajith lakshmi menon

“வீரம்” சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி வரும் இந்த படத்தில் அஜித் தங்கை கதாப்பாத்திரம் வலுவானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக பிரபல நடிகைகளிடம் பேசப்பட்டு வந்தது. நித்யா மேனன் அல்லது ஸ்ரீதிவ்யா அஜித் தங்கையாக  நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில்  லக்ஷ்மி மேனன் அந்த கதாபாத்திரத்துக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பபாங்கான பெண்ணாக லக்ஷ்மி மேனன் நன்கு பொருந்துவார் என்பதால் அவர் ...

Read More »

லாரன்சை பாராட்டிய ரஜினி

KANCHANA 2

மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனாவை தொடர்ந்து அதனுடைய இரண்டாம் பாகமான “காஞ்சனா -2” வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்  7 வயது சிறுவன் முதல் 70 வயதானவர் வரையிலான தோற்றங்களில் நடித்திருக்கிறார். இதில்  7 வயது சிறுவன்  போஸ்டரை பார்த்த ரஜினி லாரன்சை தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். மேலும் ராகவேந்திரர் ஆசி எப்போது உனக்கு இருக்கும் என்றும் , படம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் வாழ்த்தியிருக்கிறார்.

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE