Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

மீண்டும் நடிக்க வரும் நஸ்ரியா

_Nazriya_Nazeem_New_Photos_in_Thirumanam_Ennum_Nikka_Moviecd666e25181544109b930cdf57ef6e37

கடந்த ஆகஸ்ட்-21ஆம் தேதி நஸ்ரியாவுக்கும் பஹத் பாசிலுக்கும் திருமணம் நடந்தது.  திருமணத்துக்கு பின் நஸ்ரியா எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இனி நஸ்ரியா நடிக்க மாட்டார் என்ற செய்தியும் வெளிவந்தது. இந்த நிலையில் தனது கணவரின் ஒத்துழைப்புடன் மீண்டும் அரிதாரம் பூசப்போகிறார் நஸ்ரியா. நஸ்ரியாவின் சூப்பர்ஹிட் படமான ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தை தயாரித்த இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கவுள்ள ‘மணியறையில் ஜின்னு’ என்கிற படத்தில் நஸ்ரியா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நஸ்ரியாவுக்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசிலே நடிப்பார் என தெரிகிறது.

Read More »

ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துக்கள் முடக்கம்

aascar films

தமிழ்சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். “தசாவதாரம்” “ஐ” முதலிய பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ளார்.  ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனை செலுத்தாததால் அவரது அலுவலகம், வீடு மற்றும் மூன்று திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தி இருக்கிறது. இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மூன்று சொத்துக்களை சுவாதீனப்படுத்தி இருக்கிறோம். சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள வீடு, வேலூரில் உள்ள திரையரங்கம் மற்றும் சேலத்தில் உள்ள சந்தோஷ், சப்னா மற்றும் சாந்தம் ...

Read More »

“மாஸ்” படத்தில் கிளாமரில் கலக்கியிருக்கும் ப்ரணிதா

pranitha_subhash_film_actress-2560x1600

தமிழில் சகுனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ப்ரணிதா . நீண்ட இடைவெளிக்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “மாஸ்” படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா கிளாமர் காட்சிகளுக்கு “நோ” சொல்லி விட்டாராம். அதை ஈடு செய்யவே ப்ரணிதா இரண்டாவது நாயகியாக கொண்டு வரப்பட்டாராம். தமிழ்சினிமாவில் தனக்கான  இடத்தை மாஸ் படத்தின் மூலம் உறுதி செய்யமுடியும் என நம்பும் ப்ரணிதா எல்லா கிளாமர் காட்சிகளுக்கும் ஒகே சொல்லி நடித்திருக்கிறாராம். ப்ரணிதா கதாப்பாத்திரமும் பேசப்படும் என படவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

திரைப்படமாகும் சகாயம் வாழ்க்கை

sagayaam film

“லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ” என்ற வாசகத்துடன் நேர்மையான அதிகாரிக்கு இலக்கணமாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களின் வாழ்க்கை திரைப் படமாக்கப்படுகிறது. நிமிந்து நில் படத்தின் மூலம் லஞ்சத்திற்கு எதிராக சாட்டையை சுழற்றிய இயக்குனர் சமுத்திரக்கனி இந்த படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேர்மையான அதிகாரியாக இருப்பதால் சகாயம் சந்தித்த சவால்கள் , அச்சுறுத்தல்கள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகும் என தெரிகிறது.

Read More »

“என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள் ” – சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  சிவகார்த்திகேயன் பேசியதாவது :- காமெடியனாக இருந்து ஹீரோவாக வருவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். நமக்கு ஜோடியாக ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆரம்ப காலத்தில் என்னுடன் நடிக்க மறுத்து விலகிய நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். மான் கராத்தே படத்தில் ஹன்ஷிகா என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டபோது அவரை பார்த்து நிறைய பேர் ‘உனக்கு என்ன பைத்தியமா? சிவா கூட நடிக்க போறியா?’ என்று கேட்டார்களாம்.  அதுக்காக நாம ஹீரோயின்கள் இல்லாத படதில்லா நடிக்க ...

Read More »

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் சூர்யா?

suriya

சதுரங்கவேட்டை படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் வினோத். இவரின் அடுத்த படம் என்ன என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் , வினோத்தின் அடுத்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா தற்சயம் மாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிறம் மே 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து 24 , ஹைக்கூ முதலிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றை முடித்து கொண்டு வினோத் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Read More »

தொகுப்பாளினியை மணக்கும் சாந்தனு

shanthanu marriage

இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனும் , இளம் நடிகருமான சாந்தனுவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது . பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி விஜயகுமார் தம்பதியரின் மகளும் , கலைஞர் தொலைக்காட்சி “மானாட மயிலாட” தொகுப்பாளியுமான கீர்த்தியை மணக்க இருக்கிறார் சாந்தனு. இவர்களின் திருமணம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி கோவிலில் நடக்க இருக்கிறது. அதற்க்கு அடுத்த நாள் சென்னையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

Read More »

“இது உங்க ஏரியா , தாராளமா கிள்ளலாம் “

sonia

விவேக் ஹீரோவாக நடிக்கும்  ‘பாலக்காட்டு மாதவன்’ இசை வெளியீடு விழா நேற்று நடந்தது.  ஆடியோவை அனிரூத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றார். நிகழ்ச்சியில் விவேக் பேசியதாவது “காமெடி நடிகருடன் நடிக்க எல்லா ஹீரோயின்களும் தயங்குகிறார்கள். சாக்குபோக்கு சொல்லி தட்டிகழித்துவிடுவார்கள். தங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஹீரோயின்களிடம் கேட்டால் நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் காமெடி நடிகருக்கு கால்ஷீட் மட்டும் தரமாட்டார்கள். ஆனால் சோனியா அகர்வால் என்னுடன் ஜோடியாக நடித்துள்ளார். அவரது இடுப்பை கிள்ளும் காட்சியில் நடிக்க தயங்கினேன். ...

Read More »

கல்யாண் விளம்பர சர்ச்சையில் ஐஸ்வர்யாராய்

aishwarya-rai-brand-ambassador-kalyan-jewellers

நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு மற்றும் பலர் சமிபத்தில் கல்யாண் நகை கடையை  திறந்து வைத்தனர். அந்த கடையின் விளம்பர படம் தற்போது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திற்கும் போது, ஒரு கறுப்பின சிறுவன் குடை பிடித்திருப்பது போல சித்தரிக்கபட்டிருந்தது. ‘கருப்பாக இருப்பவர்கள் அனைவரும் அடிமைகள்’ என்பதை போலவே இது கட்டுவதாக அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த படத்தை இப்போது விளம்பரத்திலிருந்து நீக்கி விட்டு, மன்னிப்பு கோரியுள்ளனர்.

Read More »

மீண்டும் இணையும் கெளதம் மேனன் – அருண்விஜய்

arun vijay gautham menon

கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அது எல்லாராலும் பாராட்டப்பட்டது.  இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைய இருக்கிறார்கள். அருண் விஜய் – கார்த்திகா ஜோடியாக நடித்திருக்கும் “வா டீல் ” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெளதம் மேனன் அருண் விஜயை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். தற்சயம் , கெளதம் மேனன் ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE