Warning: session_start(): open(/tmp/sess_ea411d71708ed40a93e1832ff6e39c59, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Baahubali 2 movie review ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Baahubali 2 movie review

baahBaahubali 2 movie review

தென்னிந்திய திரைப்படங்களில் உலகளாவிய வெற்றியை சரித்திரமாக்கி “பாகுபலி” என்கிற பெயரும் “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்” என்கிற கேள்வியும் இந்தியளவில் மிகப்பெரிய பிரபலம் பெற்றது இயக்குநர் ராஜமௌலிக்கும் தென்னிந்திய திரைப்படத்துறைக்கு கிட்டிய மகுடம். அப்புகழ் பெற்ற பாகுபலியின் இறுதி அத்தியாயம் அதீத எதிர்பார்ப்பிற்கு நடுவே நான்கு மொழிகளில் இன்று வெளிவந்துள்ளது.

அமரேந்திர பாகுபலி என்கிற கதாநாயகனாக வீரம் சாற்றும் ஆக்கிரோசம், தர்மம் காக்கும் சிந்தனை என நம்முன் அக்கால அரசனை, படைத்தளபதியை நிறுத்தியிருக்கிறார் பிரபாஸ். கட்டுமஸ்தான உடல், கம்பீரமான குரல் என நேர்த்தியான நடிப்பை தந்துள்ளார். அசாதரணமான உடல்வாகு, ஆட்கொனரும் கண்கள் என மிரளவைக்கும் போட்டியாக வாழ்ந்திருக்கிறார் ராணா டக்குபதி. விஷம் கக்கும் சிந்தனை, அசாத்திய நடிப்பு என நாசர் மிரள வைக்கிறார். கட்டப்பாவாக வாழ்ந்து விசுவாசம் காக்கும் சத்யராஜ், பேரழகிற்கு வெட்கம் தீட்டும் அழகுச் சிலையாக அனுஷ்கா, நியாயம் தர்மம் மேலோங்க கம்பீரத் திலகமாக உயர்ந்து நிற்கும் ரம்யாகிருஷ்னன் என படம் முழுவதும் முத்திரை பதிக்கும் நடிப்பு !!
மரகதமணியின் பின்னனி இசை முதுகெலும்பாக திகழ்ந்து படத்தின் தரத்தை உயர்த்தி பார்வையாளர்களை கதையோடு பயணிக்கச் செய்கிறது. பாடல்களில் இசை மென்மையாக இருப்பதால் மதன் கார்க்கியின் பாடல்வரிகள் காட்சியை நகர்த்துகிறது. செந்தில் மாரின் ஒளிப்பதிவு உலகத் தரத்திற்கு உயர்ந்து கதையோடு பிணைந்து திருப்திகரச் செய்கிறது. சாபு சிரிலின் கலையமைப்பு பிரம்மாண்டத்தின் உச்சம். கோட்டகிரி வெங்கடேச ராவின் படத்தொகுப்பு கச்சிதம். ரமா ராஜமௌலியின் ஆடைகள் அற்புதம். கமலக்கண்ணன் தலைமையில் காட்சி வடிவமைப்பு குழு மிகவும் நேர்த்தியான உழைப்பை கொட்டி பாகுபலி எனும் கோட்டையை காவியமாக வடித்துள்ளனர் என்றால் மிகையாகாது. காட்சி வடிவமைப்பில் இப்படம் இந்தியளவில் ஒருப் பெரிய மைல்கல் !! வாழ்த்துகள்.
விஜயந்திர பிரசாத்தின் காவியக் கதையில் உணர்ச்சி வெளிபாட்டால் பாதையமைத்து பிரம்மாண்ட காட்சிகளால் வெற்றிக் கோட்டை கட்டியுள்ளார் ராஜமௌலி !! ஒரு மணி நேரம் கடந்த பிறகு ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பு சொட்ட உணர்ச்சி ததும்புவது பெருந்திறமை !! தர்மம் ஓங்க வேண்டும் என்கிற ஒன்றை அடித்தளமிட்டு அனைத்து காட்சிகளையும் தர்க்கப் பிழையற்று செதுக்கியிருப்பது உண்மையான வெற்றி. இறுதிகட்டம் மிகவும் நேர்த்தியாக அமைந்து பார்வையாளர்களுக்கு முழு திருப்தியை தந்துவிடுவது அருமை. மதன் கார்க்கியின் வசனம் கதையோட்டத்தை மெருகேற்றியுள்ளது. இந்திய புகழடையாத கலைஞர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு ஒரு படத்தை இந்தியாவே எதிர்பார்க்க செய்ததின் விளைவே இப்படம் நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்றான பிறகும் பார்வையாளனின் மனதில் அழுத்தமான தாக்கத்தை தந்துள்ளமையால், பாகுபலி இந்திய திரைத்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய படைப்பாகும். வெற்றி எல்லை நீளட்டும் ராஜமௌலி !!

பாகுபலி உங்கள் மனதில் நீங்கா இடம்பெற்று பிரம்மாண்டத்தின் உச்சத்தை கண்முன் நிறுத்த காத்திருக்கிறான் !!

Check Also

okkmrev

Oru Kidayin Karunai Manu review

Oru Kidayin Karunai Manu review ஒரு கிடாயின் கருணை மனு – படத்தின் பெயரை கேட்டவுடன் ஆடு கோழிலாம் ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE